Idhayam Matrimony

பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்

சனிக்கிழமை, 8 மார்ச் 2025      தமிழகம்
CM-2 2025-03-08

Source: provided

சென்னை : பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை முதல்வர்  மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை முதல்வர்  மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றுவரும் நிகழ்ச்சியில் பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 100 பிங்க் நிற ஆட்டோக்கள், 150 மஞ்சள், நீல நிற ஆட்டோக்களை பெண்களுக்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த திட்டத்தில் பெண்கள் ஆட்டோக்கள் வாங்க தமிழக அரசு தலா 1 லட்ச ரூபாய் வரை மானியம் வழங்குகிறது.

தலைநகர் சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பெண்களுக்கு சுயதொழில் வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்கவும் பிங்க் நிற ஆட்டோ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து