Idhayam Matrimony

சர்வதேச மகளிர் தினம்: ஆர்.பி.எப். பெண் வீராங்கனைகளுக்கு இந்திய ரயில்வே முக்கிய அறிவிப்பு

சனிக்கிழமை, 8 மார்ச் 2025      இந்தியா
Vande-Bharat

Source: provided

புதுடெல்லி : சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய ரெயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சர்வதேச மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மகளிர் தின வாழ்த்துகள் தெரிவித்தனர். இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய ரெயில்வே ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ஆர்.பி.எப். எனப்படும் ரெயில்வே பாதுகாப்புப் படையின் பெண் பணியாளர்கள் சவாலான சூழ்நிலைகளை விரைவாக சமாளிக்க உதவும் வகையில், அவர்களுக்கு மிளகாய் ஸ்ப்ரே கேன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தனியாகவோ அல்லது குழந்தைகளுடன் பயணிக்கும் பெண் பயணிகளைப் பாதுகாக்கும்போது, அவர்களின் பாதுகாப்பான ரெயில் பயணங்களை உறுதி செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

மிளகாய் ஸ்ப்ரே கேன்களை வழங்குவதன் மூலம், பெண் ஆர்.பி.எப். பணியாளர்கள் கூடுதல் பாதுகாப்பைப் பெறுவார்கள். மேலும், அச்சுறுத்தல்களைத் தடுக்கவும், துன்புறுத்தல் சம்பவங்களை எளிதாகவும், அவசரநிலைகளை திறம்பட கையாளவும் உதவும் என்று இந்திய ரெயில்வே கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து