எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
போபால் : உலகிலேயே முகத்தில் அதிக முடிகள் கொண்ட நபர் என்ற கின்னஸ் சாதனையை மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் படைத்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் லலித் பட்டிடார் (வயது 18), இவருக்கு ஏற்பட்டுள்ள 'வேர்வுல்ப் சிண்ட்ரோம்’ என்றழைக்கப்படும் ஹைப்பர்ட்ரைக்கோஸிஸ் எனும் மரபணு மாற்றத்தினால் அவரது முகம் முழுவதும் நீளமான முடிகள் வளர்ந்துள்ளது.
இதனால், குழந்தைப் பருவம் முதல் பல்வேறு வகையான சோதனைகளுக்கு அவர் ஆளாக்கப்பட்டாலும், அவர் மனம் தளராமல் தனது அன்றாட வாழ்க்கையை பதிவு செய்து தனது யூட்டியூப் சேனலில் பதிவிட்டு வருகின்றார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் இத்தாலி நாட்டின் மிலான் நகரத்தில் நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அப்போது, மருத்துவ நிபுணர்கள் அவரது முகத்தின் சிறிய பகுதியிலுள்ள முடிக்களை சவரம் செய்து எண்ணி ஆயுவு செய்தனர். அந்த ஆய்வில் அவரது முகத்தின் ஒரு சதுர செண்டி மீட்டர் அளவில் 201.72 முடிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதன் மூலம், முகத்தில் அதிக முடிகள் கொண்ட நபர் என்ற கின்னஸ் சாதனையை அவர் படைத்துள்ளார். தனது சாதனை குறித்து அவர் கூறுகையில், இந்த அங்கீகாரத்தினால் தான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், லலித் சமூக ஊடகங்களில் மிகவும் ஈடுபாடு காட்டி வரும் நிலையில், இந்த சாதனைக்கு பின்னர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 2,65,000 ஆகவும் அவரது யூடியூப் சேனலை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1,08,000 ஆகவும் அதிகரித்துள்ளது. முன்னதாக, பல நூறு ஆண்டுகளாக ‘வேர்வுல்ஃப் சிண்ட்ரோம்’ என அறியப்பட்டு வரும் இந்த மரபனு மாற்றமானது தற்போது வரை உலகளவில் 50 பேரிடம் மட்டுமே கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


