எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் மழை பெய்தால்.. ஐ.சி.சி. விதிமுறை கூறுவது என்ன?
தீவிரமாக பயிற்சி...
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் சாம்பியன் யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு துபாயில் சந்திக்கின்றன. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். போட்டி நடைபெறும் நாளில் அங்கு மழை பெய்ய வாய்ப்பில்லை என்று வானிலை அறிக்கைகள் கூறுகின்றன.
ஒத்திவைக்கப்படும்...
இருப்பினும் இயற்கையை யாராலும் துல்லியமாக கணித்து விட முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் ஒருவேளை இறுதிப்போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டால் என்ன நடக்கும்? ஐ.சி.சி. விதிமுறை கூறுவது என்ன? என்பது குறித்து பார்ப்போம். போட்டி நடைபெறும் நாளன்று (9-ம் தேதி) மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டால் 'ரிசர்வ் டே'-வுக்கு (மறுநாள்) ஒத்திவைக்கப்படும். ரிசர்வ் டே நாளன்றும் மழை குறுக்கிட்டு ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும். ஒருவேளை ஆட்டம் சமனில் முடிந்தால் முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


