எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது ஐ.சி.சி. சார்பில் வழங்கப்படுகிறது. இந்நிலையில், பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான பரிந்துரை செய்யப்பட்ட பட்டியல் வெளியானது. சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் சுப்மன் கில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இதில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசம் (101 ரன்), பாகிஸ்தானுக்கு (46) எதிராக விளாசிய இவர், இந்தியா பைனலுக்கு செல்ல கைகொடுத்தார்.
ஆஸ்திரேலியாவின் ஸ்மித் (இலங்கை டெஸ்ட் தொடரில் 141, 131, ரன் எடுத்தார். நியூசிலாந்தின் பிலிப்ஸ் கடைசி 5 போட்டிகளில் 236 ரன்கள் குவித்துள்ளார். ஏற்கனவே கடந்த 2023-ம் ஆண்டில் ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுப்மன் கில் சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார். சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு தாய்லாந்தின் திபாச்சா, ஆஸ்திரேலியாவின் அலானா கிங் மற்றும் அனாபெல் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
______________________________________________________________________________________________
அதே ஆடுகளத்தில் இறுதிப்போட்டி
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கான ஆடுகளம் (பிட்ச்) விவரம் வெளியாகி உள்ளது. பிப்ரவரி 23-ந்தேதி இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது பயன்படுத்தப்பட்ட அதே ஆடுகளத்தில் தான் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது. இந்த பிட்சில் இந்திய அணி பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.
இறுதிப் போட்டியில் கள நடுவர்களாக பால் ரீபெல் (ஆஸ்திரேலியா), ரிச்சர்டு இல்லிங்வொர்த் (இங்கிலாந்து) செயல்படுவார்கள். ஜோயல் வில்சன் (வெஸ்ட் இண்டீஸ்) 3-வது நடுவராகவும், தர்மசேனா (இலங்கை) 4-வது நடுவராகவும் இருப்பார்கள். மேட்ச் நடுவராக ரஞ்சன் மதுகல்லே செயல்படுவார்.
______________________________________________________________________________________________
சேலையில் அசத்தும் எல்லீஸ் பெர்ரி
ஆர்சிபி வீராங்கனைகள் சேலையில் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடப்பு சாம்பியனான ஆர்சிபி மகளிரணி முதலிரண்டு போட்டிகளில் வென்று கடைசி 4 போட்டிகளில் தோல்வியுற்றது. இருப்பினும் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பிருக்கிறது. மகளிர் நாளை முன்னிட்டு நேற்றிரவு லக்னௌவில் ஆர்சிபி வீராங்கனைகள் சேலை அணிந்து கொண்டாடினர்.ஆஸி. வீராங்கனை எல்லீஸ் பெர்ரியின் சேலை புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
______________________________________________________________________________________________
'ஒருநாள்' குறித்து மொயின் அலி
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மொயின் அலி ஒருநாள் கிரிக்கெட் பேட்டர்களுக்கு சாதகமாக இருப்பதால் அது கிட்டதட்ட இறந்துவிட்டதாகக் கூறியுள்ளார். 2019 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டராக மொயின் அலி இருந்தார். பின்னர் 2024ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்போது நடைபெற்றுவரும் சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்து அணி மோசமாக விளையாடி குரூப் ஸ்டேஜிலிருந்து வெளியேறியது.
டி20 கிரிக்கெட்டின் எழுச்சியினால் பாகிஸ்தான், துபையில் நடைபெறும் இந்தப் போட்டிகளைக் காண பார்வையாளர்கள் குறைந்துவிட்டார்கள். இந்நிலையில் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் மொயின் அலி கூறியதாவது: ஒருநாள் கிரிக்கெட் இறந்துவிட்டது. உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளைத் தவிர்த்து ஒருநாள் போட்டிகள் கிட்டதட்ட இறந்துவிட்டன. பல காரணங்களால் இதை விளையாடுவதற்கு ஏற்றதாக இல்லை. ஒருநாள் கிரிக்கெட்டில் இருக்கும் விதிமுறைகள் மிகவும் மோசமாக இருக்கிறது. முதல் பவர்பிளேவுக்குப் பிறகு கூடுதலாக ஃபீல்டர்களை நிற்க வைப்பது விக்கெட் எடுக்கக்கூடாது என்பதற்காகவே வைக்கப்பட்ட கொடூரமான விதிமுறையாகும். சிலருக்கு 60,70 சராசரி வைத்திருக்கக் காரணம் இதுதான் எனக் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


