எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரின் உடல்நலன் குறித்து மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்த பிரதமர் மோடி, அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகத் தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் நெஞ்சு வலி மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 73 வயதான தன்கர், இதயவியல் துறைத் தலைவர் ராஜீவ் நராங்க் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பிரிவில் (சி.சி.யு.) அனுதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வெற்றிகரமாக ஸ்டென்ட் பொருத்தப்பட்டதாகவும், அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
குடியரசு துணைத் தலைவரின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா, எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று நேரில் விசாரித்தார். இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று குடியரசு துணைத் தலைவரின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரின் உடல்நிலை குறித்து விசாரித்தேன். அவர் நல்ல உடல்நலத்தைப் பெறவும், விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்" என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


