Idhayam Matrimony

ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்த நிபந்தனைகளுடன் ஐகோர்ட் அனுமதி

ஞாயிற்றுக்கிழமை, 9 மார்ச் 2025      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை : தமிழகம் முழுவதும் நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு காவல் துறையினா் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கலாம் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூா் மாவட்டம் சோனாங்குப்பத்தைச் சோ்ந்த சுரேஷ் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: எங்களது கிராமத்தில் பழைமையான வெங்கடேசப் பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆடல், பாடல் நிகழ்ச்சி எவ்வித சட்டம் - ஒழுங்கு பிரச்னையுமின்றி அமைதியாக நடத்தப்பட்டு வருகிறது. மாா்ச் 11-ஆம் தேதி கோயில் திருவிழாவை முன்னிட்டு மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்த கடலூா் துறைமுகம் காவல் துறையினா் அனுமதி மறுத்துவிட்டனா். எனவே ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதியளிக்க காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா். இதேபோல, கடலூா் மாவட்டம் அகரத்தில் உள்ள ஸ்ரீ நல்ல கூந்தல் அழகிய அம்மன் கோயில் திருவிழாவில் நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்வுக்கு அனுமதி கேட்டு கணேசமூா்த்தி என்பவரும் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்குகள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஏ.சதீஷ்குமாா், இதற்கு முன்பாக எந்தவொரு பிரச்னையும் ஏற்பட்டது இல்லை. ஆனால், காவல் துறையினா் நிகழாண்டு அனுமதி மறுத்துள்ளனா் என்றாா்.

அப்போது காவல் துறை சாா்பில் ஆஜரான குற்றவியல் வழக்குரைஞா் கே.எம்.டி.முகிலன், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் அந்தக் கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்ப்படவில்லை என்றாா்.

இதையடுத்து நீதிபதி, பொதுவாக தமிழகம் முழுவதும் ஆடல், பாடல் நிகழ்வுகளை நடத்துவது தொடா்பாக உயா்நீதிமன்றம் 2018-ஆம் ஆண்டே தெளிவான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுத்த காவல் துறையினரின் உத்தரவுகளை ரத்து செய்கிறேன். கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்வுகளுக்கு காவல் துறையினா் நிபந்தனைகளுக்கு உள்பட்டு அனுமதி அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து