எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, வாக்காளர் பட்டியல் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாராளுமன்ற மக்களவையில் பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, வாக்காளர் பட்டியல் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இது குறித்து பேசிய அவர், "அரசாங்கம் வாக்காளர் பட்டியல்களை உருவாக்குவதில்லை என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் வாக்காளர் பட்டியல் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் பேசுகையில், "வாக்காளர் பட்டியலில் குறைபாடுகள் உள்ளதாக மராட்டிய மாநிலம் மற்றும் அரியானாவில் சுட்டிக்காட்டப்பட்டது. அடுத்த ஆண்டு மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல்கள் முழுமையாக திருத்தப்பட வேண்டும். வாக்காளர் பட்டியல்களில் தவறுகள் ஏற்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தேர்தல் ஆணையம் நாட்டிற்கு பதிலளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


