எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ரூ.1,435 கோடி மதிப்பிலான பான் 2.0 திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்தியாவில்1972-ம் ஆண்டு நிரந்தர கணக்கு எண், அதாவது பான் எண் நடைமுறைக்கு வந்தது. 10 இலக்க எண்ணைக் கொண்ட பான் கார்டு வரி செலுத்துதல், வரி பிடித்தம் போன்ற தனிநபர் அல்லது நிறுவனத்தின் நிதி பரிவர்த்தனைகளை இணைப்பதில் முக்கிய பங்கினை வகிக்கிறது.
பான் கார்டு என்றாலே வருமான வரி தாக்கல் செய்வதற்கு மட்டும் தான் என்ற காலம் மலையேறி விட்டது. இப்போது எந்தவொரு அதிக மதிப்பிலான நிதி சம்பந்தமான பரிவர்த்தனைகளுக்கும், தங்கம், நிலம் வாங்குவதற்கும் பான் கார்டு கட்டாயம். இதனால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்கிறார்களோ இல்லையோ, மக்கள் பான் கார்டு வாங்கி வைத்துக் கொள்கின்றனர்.
தற்போது மத்திய அரசு வரி செலுத்துவோரின் அடையாளத்தை நவீனப்படுத்தும் நோக்கில் பான் 2.0 திட்டத்தை செயல்படுத்துகிறது. ரூ.1,435 கோடி மதிப்பிலான பான் 2.0 திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பான் 2.0 திட்டத்தில் பல முக்கிய சிறப்பம்சங்கள் உள்ளன. குறிப்பாக ஒருங்கிணைந்த டிஜிட்டல் போர்டல், க்யூஆர் குறியீடு செயல்படுத்தப்பட்ட பான் கார்டுகள் மற்றும் மையப்படுத்தப்பட்ட தரவு மேலாண்மை ஆகியவை அடங்கும்.
2017-18 முதல் பான் கார்டுகளில் க்யூஆர் குறியீடு ஒரு பகுதியாக உள்ளது. இருப்பினும், பான் 2.0 திட்டத்தின்கீழ், புதிய பான் கார்டுகளில் இடம் பெறும் க்யூஆர் குறியீடு தனித்துவம் வாய்ந்தது. பான் 2.0 திட்டம், தடையற்ற மற்றும் பாதுகாப்பான வரி அனுபவத்திற்காக விரைவான செயலாக்கம், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் செலவுத் திறனை உறுதி செய்கிறது. பான் எண் மாறாது என்பதால் தற்போது உள்ள பான் கார்டு செல்லுபடியாகும்.
தற்போது நாடு முழுவதும் சுமார் 78 கோடி பான் கார்டுகள் அமலில் உள்ளன. அவற்றில் 98 சதவீதம் பான் கார்டுகள் தனிநபர்களுடையது என தகவல். அதேசமயம், நம் நாட்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் எண்ணிக்கை தோராயமாக 9 கோடி என்ற அளவில்தான் உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


