எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டெல்லி : தமிழைவிட சமஸ்கிருதமே பழமையான மொழி என்று மக்களவையில் பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே பேசியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை தொடங்கிய நிலையில், தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று தமிழக எம்பிக்கள் தெரிவித்திருந்தனர். இதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், சூப்பர் முதல்வர் ஒருவரின் பேச்சைக் கேட்டு தமிழக அரசு கையெழுத்திட மறுப்பு தெரிவிக்கிறது என்றார்.
மேலும், தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கை பற்றி பேசிய ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி நிஷிகாந்த் துபே சமஸ்கிருதம்தான் பழமையான மொழி என்று தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது:-
தி.மு.க. அரசு எப்போதும் தமிழ் மிகவும் பழமையான மொழி என்கிறார்கள். ஆனால், சமஸ்கிருதம் என்பது அதனைவிட பழமையான மொழி. கர்நாடகம், தெலங்கானா, தமிழகம் உள்பட நாடு முழுவதும் அனைத்து கோயில்களிலும் வழிபாட்டு மொழி சமஸ்கிருதம்தான். தேர்தலுக்காக கல்விக் கொள்கையை எதிர்க்கிறார்கள். தொகுதி மறுசீரமைப்பு பற்றி பேசுகிறார்கள். திமுக என்பது காங்கிரஸுடன் இணைந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. நாட்டின் அடிப்படையையே தகர்ப்பதற்கு திமுக விரும்புகிறது. ஆங்கிலத்தை புகுத்த முயற்சிக்கிறார்கள். மக்களை அவர்கள் தூண்டிவிடப் பார்க்கிறார்கள். இது ஏற்றுக் கொள்ளதக்கது அல்ல, உடனடியாக இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


