எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், விண்வெளியில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்பும் தேதியை நாசா அறிவித்துள்ளது.
ஆய்வு பணிக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் 9 மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளனர்.
அவர்களை பூமிக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அவர் இருவரும் மார்ச் 16 ஆம் தேதி பூமி திரும்புவார்கள் என நாசா அறிவித்துள்ளது. சுனிதாவும், வில்மோரும் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-9 மிஷன் விண்கலத்தில் பூமிக்குத் திரும்புவார்கள்.
நாசா விண்வெளி வீரர் நிக் ஹேக் மற்றும் ரஷிய விண்வெளி நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ்-இன் விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-9 விண்கலம் வழியாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்படுகின்றனர்.
அந்த விண்கலத்தில் இரண்டு இருக்கைகள் சுனிதா மற்றும் வில்மோருக்காக காலியாக விடப்படும். அந்த விண்கலத்தில் அவர்கள் நால்வரும் மீண்டும் பூமிக்கு மார்ச் 16 அன்று திரும்புவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


