எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூரு, தங்கம் கடத்தல் வழக்கில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு அமைச்சருக்கு ரன்யா ராவுடன் தொடர்பு இருப்பது பற்றிய அதிர்ச்சி தகவல்கள் பரவி வருகிறது.
பிரபல தமிழ் பட நடிகையும், கர்நாடக மாநில வீட்டு வசதித்துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திரா ராவின் வளர்ப்பு மகளுமான நடிகை ரன்யா ராவ் கடந்த 3-ந்தேதி துபாயில் இருந்து 12 கிலோ 800 கிராம் தங்கத்தை கடத்திக் கொண்டு பெங்களூருவுக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்தபோது அவரை டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு (டி.ஆர்.ஐ) அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் ரன்யா ராவ் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. ரன்யா ராவ் போலீஸ் காவல் நேற்றுடன் நிறைவு பெற்றதால் அவரை மீண்டும் பெங்களூரு சிறப்பு பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் சி.பி.ஐ. தரப்பில் ரன்யா ராவை காவலில் எடுத்து விசாரிக்க நேற்று கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
இந்த நிலையில், தங்கம் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பமாக ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு மந்திரிக்கு ரன்யா ராவுடன் தொடர்பு இருப்பது பற்றிய அதிர்ச்சி தகவல்கள் பரவி வருகிறது.
ரன்யா ராவ் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெரோடா இந்தியா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தில் ரன்யா ராவ் மற்றும் அவரது சகோதரர் ரஷாப் ஆகியோர் இயக்குநர்களாக இருந்தனர். இந்த நிறுவனத்தின் பெயரில் தும்கூரில் உள்ள ஷிரா தொழிற்துறை பகுதியில் எக்கு மற்றும் டாட் பார் உற்பத்தி அலகு திறக்க நிலம் வழங்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரியிருந்தார். விண்ணப்பம் தாக்கல் செய்த 10 மாதங்களுக்குள் தும்கூரில் உள்ள ஷிரா தொழிற்துறை பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 12 ஏக்கர் நிலத்தை அரசாங்கம் ஒதுக்கியது. செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளுடன் தொடர்பு இல்லாமல் அரசாங்க நிலத்தை பெறுவது எளிதல்ல. தனது தந்தையின் செல்வாக்கு மற்றும் அரசியல் தலைவர் உதவியுடன் இந்த நிலத்தை அவர் வாங்கியுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது.
ரன்யா ராவுக்கு அரசு சார்பில் நிலம் ஒதுக்கி இருப்பதற்கான ஆவணங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


