எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எதிராக ஏற்பட்ட தோல்வி குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பேசியுள்ளார்.
இந்திய அணி சாம்பியன்...
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினத்துடன் (மார்ச் 9) நிறைவடைந்தது. துபாயில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா சிறப்பான தொடத்தைத் தந்தார். அதிரடியாக விளையாடிய அவர் 83 பந்துகளில் 76 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.
மிட்செல் சாண்ட்னர்...
இறுதிப்போட்டியில் இந்திய அணியிடம் தோல்வியடைந்த நிலையில், ரோகித் சர்மா தங்களிடமிருந்து போட்டியை இந்திய அணிக்கு சாதகமாக எடுத்துச் சென்றுவிட்டதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
மிகவும் துல்லியமாக...
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளையாடிய விதம் எங்களிடமிருந்து போட்டியை இந்திய அணிக்கு சாதகமாக எடுத்துச் சென்றுவிட்டதாக நினைக்கிறேன். துபாயில் ஆடுகளங்களின் தன்மையை இந்திய அணி மிகவும் துல்லியமாக தெரிந்து வைத்திருந்து நன்றாக விளையாடினார்கள். தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டியில் தோல்வியடைவது கசப்பான ஒன்றாக இருக்கிறது. ஆனால், இறுதிப்போட்டியில் மிகவும் வலிமையான இந்திய அணிக்கு எதிராக விளையாடி தோல்வியடைந்துள்ளோம்.
பெருமையாக இருக்கிறது...
இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு சவாலளிக்கும் விதமாக செயல்பட்டோம். ஆனால், சில சிறிய தவறுகளால் சரியான முடிவுகளைப் பெற முடியவில்லை. இருப்பினும், சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்து அணியை நினைத்து பெருமையாக இருக்கிறது. இந்த தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். துபாயில் ஆடுகளங்களின் தன்மைக்கு ஏற்றவாறு விளையாடுவதற்கு நாங்கள் தயார் ஆனோம். ஆனால், துபாயில் ஆடுகளங்கள் மற்றும் லாகூர் ஆடுகளங்களுக்கு இடையே நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


