எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பரிசளிப்பு விழாவின்போது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதியை மேடைக்கு அழைக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பரிசளிப்பு மேடையில்...
சாம்பியன்ஸ் டிராபி - 2025 தொடரின் இறுதிப் போட்டி துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில், நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி 3-வது முறையாக கோப்பையை வென்றது. இந்த தொடரின் பரிசளிப்பு நிகழ்வு துபாய் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. அதில், ஐசிசி தலைவர் ஜெய் ஷா, பி.சி.சி.ஐ. தலைவர் ரோஜர் பின்னி மற்றும் செயலாளர் தேவஜித் சைகியா ஆகியோர் மேடைக்கு வந்து வீரர்களுக்கு பரிசளித்தனர். இந்த தொடரை நடத்திய நாடான பாகிஸ்தான் தரப்பில் ஒருவரும் மேடையில் இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குற்றச்சாட்டு...
இதனிடையே, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இயக்குநர்களின் ஒருவருமான சுமைர் அகமது மைதானத்தில் இருந்தும் அவரை ஐ.சி.சி. அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நடைபெறும் கூட்டு நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்றிருப்பதால், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி துபாய்க்கு பயணம் மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தானின் பிரதிநிதியாக சுமைர் அகமது அனுப்பப்பட்டிருந்தார். ஆனால், இறுதி நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்த ஐ.சி.சி. அவரை மேடைக்கு அழைக்காதது சர்ச்சையாகியுள்ளது.
துபாய்க்கு மாற்றம்...
சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்திய நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி, அந்நாட்டுக்குச் செல்ல மறுத்துவிட்டது. இதனால், இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாய் மைதானத்தில் நடத்தப்பட்டது. இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடியதால் துபாய் மைதானத்துக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


