எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பெங்களூரு : கர்நாடகா முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னையில் வரும் மார்ச் 22ம் தேதியன்று தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த தென் மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஒடிசா, கர்நாடகா, ஆந்திரா தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு தி.மு.க.வைச் சேர்ந்த குழுவினர் சென்று அழைப்பு விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் பொன்முடி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா ஆகியோர் அடங்கிய குழுவினர் பெங்களூருவில் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவை சந்தித்து இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். மேலும், கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமாரையும் இந்தக் குழுவினர் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
இந்த சந்திப்புக்குப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, "தமிழ்நாடு முதல்வர் சார்பில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு அழைப்பு விடுத்தோம். இருவரும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். சென்னையில் நடைபெற இருக்கும் கூட்டத்திற்கு இருவருமே கண்டிப்பாக வருவார்கள்" என்று அவர் கூறினார்.
அமைச்சர் பொன்முடி, எம்.பி அப்துல்லா ஆகியோர் வருகைக்கு முன்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரம் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவுடன் தொலைபேசி வாயிலாகப் பேசினார். இதையடுத்து, அவர் சார்பாக சென்ற தி.மு.க. குழுவுடன் சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


