எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : ராமேசுவரம்- ஹூப்ளி சிறப்பு ரெயில் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்தது.
கர்நாடக மாநிலம் ஹூப்ளி-ராமேசுவரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.07355) சேவை மார்ச் 22,29 ஏப்ரல் 5,12,19,26 ஆகிய தேதிகளிலும், ரமேசுவரம்-ஹூப்ளி இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் (07356) சேவை மார்ச் 23,30 ஏப்ரல் 6,13,20,27 ஆகிய தேதிகளிலும் இருமார்க்கமாகவும் தலா 6 சேவை ரத்து செய்யப்படுவதாக கடந்த மாதம் 12-ந்தேதி தெற்கு ரெயில்வே தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், ராமேசுவரம்-ஹூப்ளி இருமார்க்கமாகவும் 3 சேவைகள் ரத்து செய்யப்பட்டு, 3 சேவைகள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஹூப்ளியில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு ராமேசுவரம் வரும் சிறப்பு ரெயில் ஏப்ரல் 12,19,26 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக, ராமேசுவரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7.40 மணிக்கு ஹூப்ளி செல்லும் சிறப்பு ரெயில் ஏப்ரல் 13,20,27 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில்கள் ராமேசுவரம் செல்லாமல் ராமநாதபுரத்தில் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


