Idhayam Matrimony

உக்ரைனுக்கு மீண்டும் ராணுவ உதவி வழங்க அமெரிக்கா முடிவு

வியாழக்கிழமை, 13 மார்ச் 2025      உலகம்
Ukraine 2024 11 20

Source: provided

உக்ரைன்: உக்ரைனுக்கு மீண்டும் ராணுவ உதவிகளை வழங்க அமெரிக்கா முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உக்ரைன் - ரஷியா இடையே போர்நிறுத்தம் தொடர்பாக சவுதி அரேபியாவில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட உக்ரைன் அதிபர் அலுவலகத்தின் துணைத் தலைவரும் தூதுக்குழு உறுப்பினருமான பாவ்லோ பாலிசா, “பேச்சுவார்த்தையின்போது எழுப்பப்பட்ட கோரிக்கைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன” எனக் குறிப்பிட்டதாக உக்ரைன் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. உக்ரைனுடனான உளவுத்துறை தொடர்புகளை இடைநிறுத்தம் செய்திருந்த அமெரிக்கா தற்போது அதனை நீக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி சில நாள்களுக்கு முன்பு வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து உக்ரைனுக்கான தனது இராணுவ உதவியை அமெரிக்கா நிறுத்தியது. இதனைத் தொடர்ந்து, டிரம்ப்புக்கு ஸெலென்ஸ்கி மன்னிப்புக் கடிதம் அனுப்பியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், சவுதி அரேபியாவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அமெரிக்கா உக்ரைனுக்கு பாதுகாப்பு உதவியை மீண்டும் வழங்கும் என்று தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம்  நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை 8 மணி நேரம் நீடித்தது. இதில், அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட 30 நாள் போர்நிறுத்தத் திட்டத்தை உக்ரைன் ஏற்றுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து