எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கேப் டவுன்: சாம்பியன்ஸ் டிராபியை வென்ற ரோகித் சர்மா ஓய்வு பெறுவதற்கு காரணமே இல்லை என தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
ரோகித்ஓய்வு...
டி20 உலகக் கோப்பை இந்திய அணி வென்றவுடன் ரோஹித், கோலி, ஜடேஜா ஓய்வை அறிவித்தார்கள். அதேபோல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றவுடன் ரோகித்சர்மா ஓய்வு பெறுவாரென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரோகித்சர்மா இதனை மறுத்துவிட்டார். விராட் கோலியும் எதுவும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏன் ஓய்வு பெறவேண்டும்?...
இந்நிலையில் தெ.ஆ.வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தனது யூடியூப் சேனலில் கூறியதாவது: மற்ற கேப்டன்களை ஒப்பிடும்போது ரோஹித்தின் வெற்றி சதவிகிதம் 74%ஆக இருக்கிறது. இது மற்றவர்களை மிக அதிகம். ரோகித்இதேபோல் சென்றால் எக்காலத்துக்குமான ஒருநாள் போட்டிகளின் மிகச் சிறந்த கேப்டனாக மாறிவிடுவார். வதந்திகளை ரோஹித்தும் ஓய்வுபெறப்போவதில்லை எனக் கூறியுள்ளார். ரோகித்ஏன் ஓய்வு பெறவேண்டும்? கேப்டனாக மட்டுமில்லை, பேட்டராகவும் ரோகித்சிறப்பாக செயல்படுகிறார். இறுதிப் போட்டியில் 76 ரன்கள் அடித்து சிறப்பான தொடக்கதை அளித்தார்.
சாதனைகளே பேசும்...
அழுத்தம் அதிகமாக இருக்கும்போது முதல் ஆளாக முன்னின்று அணியை வழிநடத்தினார். அவர் எந்தவிதமான விமர்சனங்களையும் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அவரது சாதனைகளே அவருக்காக பேசும். அது மட்டுமில்லை, அவர் தனது ஆட்டத்தையும் மாற்றியுள்ளார். பவர்பிளேவில் அவரது ஸ்டிரைக்-ரேட்டை பாருங்கள். 2022க்குப் பிறகு 115ஆக முன்னேறியுள்ளது. அதுதான் நல்லது, சிறந்ததுக்குமான வித்தியாசம். அது உங்களது சொந்த ஆட்டத்தை மாற்றும், அது நிற்கவே போவதில்லை. எப்போதுமே எதாவது சிறப்பாக செயல்படவும் கற்றுக்கொள்ளவும் இருக்கத்தான் செய்யும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


