Idhayam Matrimony

தமிழகத்தின் கடன் ரூ.9 லட்சம் கோடியாக மேலும் அதிகரிப்பு

வெள்ளிக்கிழமை, 14 மார்ச் 2025      தமிழகம்
Tamilnadu-Assemble 2024-12-02

சென்னை, கடந்த ஆண்டு ரூ.8 லட்சம் கோடியாக இருந்த கடன் தற்போது மேலும் 1 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது.

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். இந்தநிலையில் பட்ஜெட்டில் நேற்று  வரவு- செலவு பற்றி புள்ளி விவரத்துடன் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய கல்வி நிதி உள்ளிட்ட பல்வேறு நிதிகள் வராதது குறித்து சுட்டிக்காட்டப்பட்டது.

2025-26-ம் ஆண்டு திட்ட மதிப்பில் வருவாய் பற்றாக்குறை ரூ.41.634.93 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது. வரி வசூலை மேம்படுத்துதல், வரி விகிதங்களை சீரமைத்தல் உள்ளிட்ட வருவாய்களை பெருக்கும் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு வருவாய் பற்றாக்குறை 2026-2027-ல் ரூ.31,282.23 கோடி ரூபாய் குறையும் என்றும், 2027-28-ம் ஆண்டு இந தொகை18,02,48 கோடி ரூபாயாக குறையும் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025-26-ம் ஆண்டில் மாநில அரசு 1 லட்சத்து 62 ஆயிரத்து 096.76 கோடிக்கு மொத்த கடன் பெற திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் 55,844.53 கோடி ரூபாய் மதிப்பிலான பொதுகடனை அரசு திருப்பி செலுத்தும். இதன் விளைவாக 31.3.2026 அன்று நிலுவையில் உள்ள கடன் 9.29.959.30 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.8 லட்சம் கோடியாக இருந்த கடன் இப்போது மேலும் 1 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து