எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம், நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடைபெற உள்ள கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு தி.மு.க. சார்பில் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.
திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து அமைச்சர் பி.டி. தியாகராஜன், தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர், முதல்வர் மு.க. ஸ்டாலினின் அழைப்புக் கடிதத்தை வழங்கினர். மேலும், கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.
இதனையடுத்து, இந்தச் சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பி.டி.தியாகராஜன், இந்த தொகுதி மறுவரையறை என்பது, கூட்டாட்சி தத்துவத்துக்கும், மாநிலங்களின் பிரதிநிதித்துவ உரிமைக்கும் எதிரான மறுக்க முடியாத தாக்குதலாகும். இந்த விஷயத்தில் நமது மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் கூட்டுப் போராட்டத்திற்கான தனது முழுமையான ஆதரவை கேரள முதல்வர் உறுதி செய்தார்" என குறிப்பிட்டுள்ளார்.
தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கேரள முதல்வர் பினராயி விஜயனை, தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் சார்பில், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பி.பி.தியாகராஜனும், நானும் சந்தித்து, அழைப்பு விடுத்தோம். இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் மாஸ்டர் கோவிந்தனையும் சந்தித்து அழைப்பு விடுத்தோம்" என குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


