Idhayam Matrimony

மகளிர் டி-20 கிரிக்கெட் தொடர்: வெற்றியுடன் தொடங்கிய இலங்கை

வெள்ளிக்கிழமை, 14 மார்ச் 2025      விளையாட்டு
Sri-Lanka-win 2024-03-31

Source: provided

 கிறிஸ்ட்சர்ச் : நியூசிலாந்தை வீழ்த்தி மகளிர் டி20 கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் இலங்கை தொடங்கியது.

இலங்கை மகளிர் அணி....

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அந்நாட்டு மகளிர் அணிக்கெதிராக தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் டி20 போட்டி...

அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 18.5 ஓவர்களில் 101 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக எம்மா மெக்லியோட் 44 ரன்கள் அடித்தார். இலங்கை தரப்பில் மல்கி மாதரா 3 விக்கெட்டுகளும், பிரியதர்ஷினி மற்றும் கவிஷா தில்ஹாரி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இலங்கை வெற்றி...

இதனையடுத்து 102 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 14.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 102 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சமாரி அத்தபத்து 64 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் ஜெஸ் கெர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இலங்கை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து