முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

30 லட்சம் உழவர்களுக்கு பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 5,242 கோடி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

சனிக்கிழமை, 15 மார்ச் 2025      தமிழகம்
MRK-2-2025-03-15

சென்னை, கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 30 லட்சம் உழவர்களுக்கு 5,242 கோடி ரூபாய் பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது,” என்று வேளாண்மை மற்றும் உழவர் நலன்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் உழவர் நலன் மற்றும் வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று (மார்ச் 15) காலை தாக்கல் செய்தார். 

அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் கடந்த 2019-2020 ஆம் ஆண்டில் 146 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கராக இருந்த மொத்த சாகுபடிப் பரப்பு, 2023-24 ஆம் ஆண்டில் 151 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. மேலும், 2019-20 ஆம் ஆண்டில் 29 லட்சத்து 74 ஆயிரம் ஏக்கராக இருந்த இருபோக சாகுபடிப் பரப்பு 2023-2024 ஆம் ஆண்டில் 33 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் என்ற அளவினை எட்டியுள்ளது.

தமிழ்நாடு இந்திய அளவில் கேழ்வரகு உற்பத்தித்திறனில் முதல் இடத்திலும், மக்காச்சோளம், எண்ணெய்வித்துகள். கரும்பு ஆகியவற்றில் இரண்டாம் இடத்திலும், நிலக்கடலை, குறுதானியங்கள் உற்பத்தித்திறனில் மூன்றாம் இடத்திலும் உள்ளது.  

விவசாயிகளின் நீர்ப்பாசன ஆதாரத்துக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு முன்னுரிமை அடிப்படையில் புதிய பாசன மின் இணைப்புகளை 2021-22 ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகின்றது. இந்த சிறப்பு முயற்சியின் காரணமாக, இதுவரை ஒரு லட்சத்து 81 ஆயிரம் பாசன மின் இணைப்புகள்  வழங்கப்பட்டுள்ளன.

நான்கு ஆண்டுகளில் இதுவரை 147 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 1,452 கோடி ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கும். ஒரு மெட்ரிக் டன்னுக்கு 215 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு இதுவரை 425 லட்சம் மெட்ரிக் டன் கரும்புக்கு 848 கோடி ரூபாய் ஊக்கத்தொகையாக உழவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 இயற்கைப் பேரிடர்களால் வேளாண்மை, தோட்டக்கலைப் பயிர்களில் ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக, 1,631 கோடியே 53 லட்சம் ரூபாய் நிதி, 20 லட்சத்து 84 ஆயிரம் விவசாயிகளுக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக 5,242 கோடி ரூபாய் நிதியானது, கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 30 லட்சம் உழவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது,” என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து