எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கச்சத்தீவு : கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்தியா-இலங்கை பக்தர்களின் பாரம்பரிய உறவுத் திருவிழாவாகக் கருதப்படும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆலயத்தின் முன்புள்ள கொடிமரத்தில் நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன், ராமேஸ்வரம் வேர்க்கோடு பங்குத்தந்தை அசோக் வினோ ஆகியோர் அந்தோணியாரின் உருவம் பதித்த கொடியை ஏற்றினர். முன்னதாக இந்த விழாவில் பங்கேற்க இந்திய பக்தர்களுக்கு இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மறைமாவட்ட பிஷப் அழைப்பு விடுத்தார். இதன்படி, கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இந்தியாவில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 414 பேர் நேற்றுமுன்தினம் படகுகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
தொடர்ந்து கச்சத்தீவு திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இருநாட்டு பக்தர்களும் ஜெபமாலையை சுமந்து வந்த சிலுவை பாதை நிகழ்ச்சியும், நற்கருணை ஆராதனையும், அந்தோணியார் தேர் பவனியும் நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து வந்திருந்த பங்குத் தந்தையர்கள், அருட்சகோதரிகள் உள்ளிட்ட சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


