எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டெல்லி : அசாம் மாநிலத்தில் அமைதி திரும்ப காங்கிரஸ் கட்சி அனுமதிக்கவில்லை எனறு அமித்ஷா பேசினார்.
அசாம் மாநிலத்தில் அமைதி திரும்ப காங்கிரஸ் கட்சி அனுமதிக்கவில்லை. பிரதமர் மோடி அமைதியை மீட்டெடுத்தார். கட்டமைப்புகள் மேம்படுத்தினார் என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, அசாமில் புனரமைக்கப்பட்ட லசித் பார்புகான் போலீஸ் அகாடமியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமித் ஷா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அசாமில் அமைதி நிலவ காங்கிரஸ் அனுமதிக்கவில்லை. ஆனால், பிரதமர் மோடி அமைதியை மீட்டெடுத்தார். உள்கட்டமைப்புகளை உருவாக்கினார். அசாம் மாநில இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தினார். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, கடந்த 10 ஆண்டுகளில் மாநிலத்தில் அமைதி நிலவ முக்கிய வளர்ச்சி திட்டத்தில் இணைந்துள்ளனர். நரேந்திர மோடி தலைமையிலான அரசு 3 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கட்டமைப்பு திட்டங்களை அசாமுக்கு கொடுக்க இருக்கிறது. சமீபத்தில் முடிவடைந்த வணிக மாநாட்டில் கூடுதலாக 5 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அசாமில் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடுவதற்காக காவல்துறை இருந்தது. ஆனால் இப்போது அது மக்களை மையமாகக் கொண்டதாகியுள்ளது. இதனால் கடந்த மூன்று ஆண்டுகளில் தண்டனை விகிதம் 5 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது விரைவில் தேசிய சராசரியை விட அதிகமாகும். லசித் பார்புகான் போலீஸ் அகாடமி அடுத்த ஐந்து வருடங்களில் நாட்டின் முதன்மையானதாக மாறும். இந்த அகடாமிக்கு 1050 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட இருக்கிறது. இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


