எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க 297 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் நேற்று (மார்ச் 15) காலை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
பேரவையில் பேசிய அவர்,
"சர்க்கரை ஆலைகளுக்கு 2024-2025 அரவைப்பருவத்திற்கு கரும்பு வழங்கிய உழவர்களுக்குச் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படும்.
2024 - 2025 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்குப் பதிவு செய்து கரும்பு வழங்கிய தகுதியுள்ள உழவர்களுக்கு, டன் ஒன்றுக்கு 349 ரூபாய், சிறப்பு ஊக்கத்தொகையாக உயர்த்தி வழங்கப்படும். இதனால் கரும்புக்கு டன் ஒன்றிற்கு 3,500 ரூபாய் வழங்கப்பட்டு, சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கரும்பு உழவர்கள் பயன்பெறுவர். இதற்கென 297 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
அதிக சர்க்கரைக் கட்டுமானம், பூச்சி, நோய்த் தாக்குதலுக்கு எதிர்ப்புப் பண்புகளைக் கொண்ட புதிய கரும்பு ரகங்களை உழவர்கள் அதிக பரப்பில் சாகுபடி செய்திடவும். சாகுபடி செலவைக் குறைக்கும் விதமாக கரும்பு விதைக்கரணைகள். நாற்றுகள், இயந்திர அறுவடைக்கு ஏற்ற அகலப்பார் நடவு முறை. நுண்ணூட்ட உரக்கலவை, தோகை தூளாக்குதல், நிலப்போர்வை அமைத்தல் போன்ற இனங்களை கரும்பு உழவர்களுக்கு மானிய விலையில் வழங்கவும் மத்திய, மாநில அரசு நிதியிலிருந்து 10 கோடியே 53 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" என்று அறிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


