எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : உழவர் சந்தை காய்கறிகளை நுகர்வோர் வீடுகளுக்கு டெலிவரி செய்யும் வகையில், உள்ளூர் இணைய வர்த்தகத்துடன் இணைக்கப்படும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்து உரையாற்றினார்.
அதில் வெளியாகியிருக்கும் அறிவிப்புகளில்,
வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான "டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி" உருவாக்கப்படும்!
சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரையில் உயிர்ம வேளாண் விளைபொருட்களுக்கு தர நிர்ணய ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 9,36,000 விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ. 269.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் 2030, 2050 ஆண்டுகளில் பயிர்களில் ஏற்படும் பாதிப்புகள் கணிக்கப்பட்டுள்ளன.
உழவர் சந்தை காய்கறிகளை நுகர்வோர் வீடுகளுக்கு டெலிவரி செய்யும் வகையில், உள்ளூர் இணைய வர்த்தகத்துடன் இணைக்கப்படும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்
அதிக லாபம் தரும் மாற்றுப் பயிர்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சிக்கென ரூ. 1.35 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிப்பு வெளியானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


