எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழ் மொழி இந்த நாட்டின் சொத்து. இந்த உலகத்தின் சொத்தும் கூட. அதில் நாம் பெருமையும் மகிழ்ச்சியும் அடைவோம் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசினார்.
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஸ்ரீபெரும்புதுாரில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: தமிழ் ஒரு இனிமையான மொழி. எனக்கு சில வார்த்தைகள் தான் தெரியும். வணக்கம், எப்படி இருக்கீங்க. நன்றி. நான் ஒரு அதிர்ஷ்டசாலி. நான் படித்த கான்பூர் ஐ.ஐ.டி.,யில் சடகோபன் என்ற பேராசிரியர் இருந்தார். அவர் தான் எனக்கு தமிழை அறிமுகப்படுத்தினார். தமிழ் கலாசாரத்தையும் அவர் அறிமுகம் செய்தார்.நாங்கள் அனைவரும் தமிழ் கலாசாரத்தையும், தமிழ் மொழியையும் மதிக்கிறோம்.
தமிழ், இந்த நாட்டின் சொத்து. இந்த உலகத்தின் சொத்தும் கூட. அதில் நாம் பெருமையும் மகிழ்ச்சியும் அடைவோம். அனைத்து இந்திய மொழிகளையும் கொண்டாடுவோம். இந்த உணர்வோடு தான் நம் பிரதமர் பணியாற்றி வருகிறார். இந்திய நாட்டில் பேசப்படும் ஒவ்வொரு மொழியும் அதற்குரிய மகத்தான இடத்தை பெற வேண்டும்.உரிய மரியாதை கிடைக்கச் செய்ய வேண்டும். உரிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாடுபடுகிறார். நமது சகோதர உறவு, நட்புறவு, வேறுபட்ட நாகரிகங்களுக்கு இடையிலான உறவுகளில் எந்த ஒரு தடையும் வந்து விடக்கூடாது.
நம் நாட்டை வலிமையானதாக்கும் ஒற்றை இலக்குடன் தான் நாம் அனைவரும் பார்க்க வேண்டும்; பணியாற்ற வேண்டும். உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியாவை உயர்த்தவும், நமது வலிமையை உலகம் அங்கீகரிப்பதை உறுதி செய்யவும் நாம் பாடுபட வேண்டும்.இவ்வாறு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


