எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : த.வெ.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க 2500 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப் பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் சென்டரில் நடக்கிறது. பொதுக்குழு கூட்டம் மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றுவது பற்றி கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்துடன் கட்சி தலைவர் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் மற்றும் கட்சியின் எதிர்கால திட்டங்கள், மக்கள் நலத்திட்டங்கள், கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருக்கிறது.
பின்னர் பொதுக்குழு தீர்மானங்கள் தேர்தல் கமிஷனுக்கு கட்சி சார்பில் அனுப்பப்பட இருக்கிறது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஒரு மாவட்டத்திற்கு 15 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. கூட்ட அழைப்பு மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் மூலம் நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.
ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கும் மாவட்ட செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என 15 பேர் பங்கேற்க இருக்கின்றனர். அதன்படி கூட்டத்தில் சுமார் 2,500 பேர் பங்கேற்க இருக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கட்சி தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரில் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் செய்து வருகிறார்.
பொதுக்குழு கூட்டத்தில் தேர்தல் கூட்டணி, அடுத்தக் கட்ட நடவடிக்கை மற்றும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி கட்சி தலைவர் விஜய் பேச இருக்கிறார். தொடர்ந்து அடுத்தடுத்து வெளியாகி வரும் விஜய் அறிவிப்புகள் தொண்டர்களிடையே மேலும் உற்சாகத்தை அதிகரித்து வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


