Idhayam Matrimony

சபாநாயகரை சந்தித்தது ஏன்? - செங்கோட்டையன் விளக்கம்

சனிக்கிழமை, 15 மார்ச் 2025      தமிழகம்
Sengottaiyan 2023-04-20

Source: provided

சென்னை : சபாநாயகரை சந்தித்தது குறித்து செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் விளக்கமளித்தார்

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்  செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. சட்டசபையில் பழனிசாமியை சந்திப்பதையும் அவர் தவிர்த்தார்.

இந்நிலையில், சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது நாளான நேற்றும் செங்கோட்டையன் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அறைக்கு செல்வதை தவிர்த்தார். அவர் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அறைக்கு செல்லாமல் சபாநாயகர் அறைக்கு சென்றார். பின்னர் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட செங்கோட்டையன் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்த நிலையில், சபாநாயகரை சந்தித்தது ஏன்? என்பது குறித்து செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், கோபி தொகுதியில் உள்ள கொடிவேரி அணையில் நாள் ஒன்றுக்கு 3 லட்சம் லிட்டர் அளவிற்கு தண்ணீர் எடுக்கும் ஒரு தொழிற்சாலை அமைய இருப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் தன்னிடம் மனு அளித்ததாகவும், இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுப்பதற்காகவே சபாநாயகரை சந்தித்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த சந்திப்பின்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அருகில் இருந்ததாகவும் செங்கோட்டையன் குறிப்பிட்டார். இதையடுத்து 'எடப்பாடி பழனிசாமியை சந்திப்பீர்களா?' என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவருக்கு, தனக்கும் எந்த முரண்பாடும் கிடையாது என்றும், தன்னுடைய கொள்கை உயர்வானது, பாதை தெளிவானது என்றும் திட்டவட்டமாக செங்கோட்டையன் பதிலளித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து