Idhayam Matrimony

எழுத்தாளர் நாறும்பூநாதன் காலமானார்

ஞாயிற்றுக்கிழமை, 16 மார்ச் 2025      தமிழகம்
Narumboonathan 2025-03-16

Source: provided

சென்னை : எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன் உடல்நலக்குறைவால் நேற்று (மார்ச் 16) காலமானார். அவருக்கு வயது 64.

 தமிழ்நாடு அரசின் உ. வே. சா. விருது பெற்ற பெருமைக்குரிய எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுமலையை பூர்வீகமாகக் கொண்டவர். யானை சொப்பனம், திருநெல்வேலி நீர்- நிலம் -மனிதர்கள், வேணுவன மனிதர்கள், பிரேமாவின் புத்தகங்கள் உள்பட மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார்.

வங்கியில் பணிபுரிந்து வந்த நாறும்பூநாதன், விருப்ப ஓய்வு பெற்று அரசுப் பணியை துறந்து, அதன்பின் முழுநேர எழுத்தாளராக தம்மை தமிழுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர். சிறந்த சமூக செயற்பாட்டாளராகவும் விளங்கிய இவர், இளம் படைப்பாளிகளை ஊக்குவித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நாறும்பூநாதன் நேற்று (மார்ச் 16) காலை உயிரிழந்தாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அன்னாரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து