Idhayam Matrimony

சிறையில் சித்ரவதை செய்கிறார்கள்: நடிகை ரன்யா ராவ் கண்ணீர் கடிதம்

ஞாயிற்றுக்கிழமை, 16 மார்ச் 2025      சினிமா
Ranya-Rao-2025-03-10

Source: provided

பெங்களூரு : தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ரன்யா ராவ், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டி.ஆர்.ஐ.) தன் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக ரன்யா ராவ், டி.ஆர்.ஐ. யின் கூடுதல் இயக்குநர் ஜெனரலுக்கு (ஏ.டி.ஜி.க்கு) கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இந்த வழக்கில் நான் நிரபராதி என்று சொல்ல உங்கள் அதிகாரிகள் என்னை அனுமதிக்கவில்லை. காவலில் எடுக்கப்பட்டதிலிருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை 10 முதல் 15 முறை தன்னை அதிகாரிகள் அறைந்தார்கள்.

ஏற்கனவே எழுதப்பட்ட எழுதப்பட்ட 50 முதல் 60 பக்கங்களிலும், சுமார் 40 வெற்றுப் பக்கங்களிலும் கையெழுத்திட உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டேன். திரும்பத் திரும்ப அடித்து, அறைந்த போதிலும், அவர்கள் (டி.ஆர்.ஐ.  அதிகாரிகள்) தயாரித்த அறிக்கையில் கையெழுத்திட நான் மறுத்துவிட்டேன். காவலில் வைக்கப்பட்டிருந்த காலத்தில், நான் தூங்கவோ சாப்பிடவோ அனுமதிக்கப்படவில்லை.

இது தவிர, எனது தந்தையின் அடையாளத்தை வெளியிடுவதாகவும் ஒரு அதிகாரி என்னை மிரட்டினார். இந்த வழக்குக்கும் யாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னிடமிருந்து எந்த தங்கமும் மீட்கப்படவில்லை.

டெல்லியைச் சேர்ந்த சிலர் அதிகாரிகள் என்று கூறிக் கொண்டு என்னை ஒரு பொய் வழக்கில் சிக்க வைத்துள்ளனர். உண்மையான குற்றவாளிகள் காப்பாற்றப்படுகின்றனர் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ரன்யா ராவ் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ரன்யாவின் தந்தை டி.ஜி.பி. ராமச்சந்திர ராவ் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.

ஆனால், கடந்த மார்ச் 3 ஆம் தேதி துபாயில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய ரன்யா ராவிடம் இருந்து ரூ.12.56 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக டி.ஆர்.ஐ.  அறிக்கை குறிப்பிடுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து