Idhayam Matrimony

கர்நாடகாவில் ரூ. 375 கோடி போதைப்பொருள் பறிமுதல் : 2 வெளிநாட்டு பெண்கள் கைது

ஞாயிற்றுக்கிழமை, 16 மார்ச் 2025      இந்தியா
Jail 2024 08 09

Source: provided

மங்களூரு : கர்நாடக காவல்துறை வரலாற்றில் மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் பறிமுதல் சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது. இதில், இரு பெண்களைக் கைது செய்த மங்களூர் நகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

டில்லியில் இருந்து பெங்களூருக்கு விமானம் வழியாக மெத்தபெட்டமைன் போதைப்பொருளை பெரியளவில் விநியோகம் செய்ய தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த இரு பெண்கள் கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டிக்கு அருகிலுள்ள நீலாத்ரி நகரில் அவர்களிடம் இருந்து ரூ.375 கோடி மதிப்புள்ள 37.870 கிலோகிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியா முழுவதும் செயல்பட்டு வந்த பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரூ. 2,18,460 பணம் , 4 மொபைல் போன்கள், 2 பயணப் பைகள், 2 பாஸ்போர்ட்டுகள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட அடோனிஸ் ஜபுலைல் (31), அபிகேல் அடோனிஸ் (30) ஆகிய இருவரும் டில்லியில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த கைது சம்பவத்தில் முதன்முதலாக மங்களூர் பகுதியில் 15 கிராம் போதைப் பொருள் விற்பனை செய்ததாக மங்களூர் கிழக்கு காவல்துறையினர் ஹைதர் அலி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

மேலும், இது சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணையில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த பீட்டர் இகேடி பெலோன்வு என்பவர் கைது செய்யப்பட்டு 6.248 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.  பின்னர் தொடர்ந்து விசாரித்தபோது, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட தென்னாப்பிரிக்க பெண்கள் குறித்து தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, மார்ச் 14 அன்று இருவரையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து