Idhayam Matrimony

ஏ.ஆர்.ரகுமான் பூரண நலம் பெற விழைகிறேன்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

ஞாயிற்றுக்கிழமை, 16 மார்ச் 2025      தமிழகம்
Udayanidhi-1 2023-10-15

Source: provided

சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் விரைந்து பூரண நலம் பெற்று இல்லம் திரும்பிட விழைகிறேன் என்று துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஏ.ஆர். ரகுமானுக்கு நேற்று காலையில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டது இதற்கு காரணம் எனக்கூறப்பட்டது. பின்னர் பரிசோதனைகள் முடிவந்த நிலையில் ஏ.ஆர். ரஹ்மான் நலமுன் வீடுதிரும்பியுள்ளார்.

இந்த நிலையில் ஏ.ஆர். ரகுமான் விரைந்து நலம் பெற விழைகிறேன் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சார் விரைந்து பூரண நலம் பெற்று இல்லம் திரும்பிட விழைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து