எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சுடலை மாட சாமியின் கொடை விழா நடக்கிறது. அப்போது தெருக்கூத்து கலஞரான திருநங்கை ஒருவர் மர்மமாக இறக்கிறார். அன்றிலிருந்து அங்கு கொடை விழா நடக்காமல் போகிறது. பல வருடங்களாக நடக்காமல் இருக்கும் கொடை விழாவை மீண்டும் நடத்த வேண்டும் என்ற முடிவுடன் வருகிறார் நாயகன் கோகுல் கவுதம். அதற்கு இடைஞ்சலாக இருக்கிறார் ஊர் தலைவரான சூரிய நாராயணன். கொடை விழா நடத்தும் முயற்சியில் ஈடுபடும் போது நாயகன் மீது கொலைப்பழி விழுகிறது. அதனால் சிறைக்கு செல்லும் நாயகன் திரும்பி வந்து மாடன் கொடை விழாவை நடத்தினாரா?, திருநங்கை மரணத்தின் பின்னணி யார் என்பதை கண்டு பிடித்தாரா ஆகிய கேள்விகளுக்கான விடைதான் படத்தின் கிளைமாக்ஸ். நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் கோகுல் கவுதம், மண்ணின் மைந்தராக, கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வாக இருக்கிறார். காதல் காட்சிகளில் சற்று தயக்கத்துடன் நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஷர்மிஷா மிடுக்காக அசத்தலாக நடித்திருக்கிறார். சூப்பர் குட் சுப்பிரமணியம், ஸ்ரீப்ரியா சிவவேலன், பால்ராஜ், மாரியப்பன், ரஷ்மிதா என அனைவரும் எதார்த்த நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். விபின். ஆர் இசை அருமை. எழுதி இயக்கியிருக்கும் இரா.தங்கபாண்டி கிராமத்து வாழ்வியலின் ஒரு பகுதியை கதைக்களமாக எடுத்துக் கொண்டு அதை திரை மொழியில் நேர்த்தியான படைப்பாக கொடுத்திருக்கிறார். மொத்தத்தில், இந்த ‘மாடன் கொடை விழா’ நம் மண் சார்ந்த படைப்பு.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


