எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மாஸ்கோ : உக்ரைன்- ரஷியா இடையேயான போர் நிறுத்த ரஷிய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தையை அமெரிக்கா அதிபர் நடத்த உள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. உக்ரைனின் பெரும்பாலான இடங்களை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பின்னர் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் ராணுவ உதவி வழங்கியன. இதனால் உக்ரைன் ரஷியாவுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்த தொடங்கியது. ரஷியா பல இடங்களில் பின்வாங்கியது. இருநாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் உக்ரைன் பகுதிகளை ரஷியா ஆக்கிரமித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் 3 வருடங்களை தாண்டி சண்டை நடைபெற்று வருகிறது. சண்டை நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் உக்ரைன்- ரஷியா இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
30 நாட்கள் கொண்ட போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷியா இடையே அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏறக்குறைய இரு நாடுகளும் சம்மதிக்கும் நிலையில்தான் உள்ளது. இந்த நிலையில் நேற்று ரஷிய அதிபர் புதின் உடன் பேச இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் புளோரிடாவில் இருந்து வாஷிங்டனுக்கு செல்லும் வழியில் பத்திரிகையாளர்களுடன் உரையாடினார். அப்போது "செவ்வாய்க்கிழமை சில அறிவிப்புகள் வெளியாகுவதை நாம் பார்க்கலாம். நான் புதின் உடன் செவ்வாய்க்கிழமை பேச இருக்கிறேன். கடந்த வாரத்தில் போர் நிறுத்தம் தொடர்பாக பல்வேறு பணிகள் நடைபெற்றன. நாங்கள் போரை முடிவுக்கு கொண்டு வர முடியுமா? எனப் பார்க்கிறோம்.
போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ஒரு பகுதியாக நிலம் மற்றும் மின் நிலையங்கள் ஒரு பகுதியாக இருக்கும். நாங்கள் நிலங்கள் குறித்து பேச இருக்கிறோம். மின் நிலையங்கள் குறித்து பேச இருக்கிறோம் என டிரம்ப் தெரிவித்தார். கடந்த வாரம் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவதை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. அந்த தடையை திரும்பப் பெற்றது. இதனைத் தொடர்ந்து டொனால்டு டிரம்ப்- புதின் இடையில் விரைவில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வோம் என ரஷியா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


