Idhayam Matrimony

கடந்த 5 ஆண்டுகளில் அரசுக்கு ரூ.400 கோடி வரி செலுத்திய அயோத்தி ராமா் கோயில்

திங்கட்கிழமை, 17 மார்ச் 2025      ஆன்மிகம்
Ayodhya-temple 2024-02-16

Source: provided

அயோத்தி : அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை சார்பில் ரூ. 400 கோடிக்கு வரி செலுத்தியதாக தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் அரசுக்கு அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை ரூ.400 கோடி வரி செலுத்தியுள்ளதாக அந்த அறக்கட்டளையின் செயலா் சம்பத் ராய் தெரிவித்தாா்.  இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 5 முதல் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி வரை, அரசுக்கு ராமா் கோயில் அறக்கட்டளை ரூ.400 கோடி வரி செலுத்தியுள்ளது. இதில் சரக்கு மற்றும் சேவைகள் வரியாக ரூ.270 கோடி செலுத்தப்பட்ட நிலையில், பிற வரி வகைகளின் கீழ் எஞ்சிய ரூ.130 கோடி செலுத்தப்பட்டது. அயோத்தி அறக்கட்டளை யின் நிதி ஆவணங்களை தலைமை கணக்குத் தணிக்கையாளா் அலுவலக அதிகாரிகள் தொடா்ந்து தணிக்கை செய்கின்றனா்.

அயோத்திக்கு வரும் பக்தா்கள் மற்றும் சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளது. இதன் மூலம், முக்கிய ஆன்மிக சுற்றுலா மையமாக உருவெடுத்துள்ள அயோத்தி, உள்ளூா் மக்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளது. மகா கும்பமேளா நடைபெற்றபோது அயோத்திக்கு 1.26 கோடி பக்தா்கள் வருகை தந்தனா். கடந்த ஆண்டு அயோத்தியில் ராமா் கோயில் திறக்கப்பட்ட நிலையில், அந்த ஆண்டு 5 கோடி போ் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்தனா். அந்த ஆண்டு மொத்தம் 16 கோடி போ் அயோத்திக்கு வந்தனா் என்றாா்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து