Idhayam Matrimony

செங்கோட்டையனுக்கு பிடித்தது போல பதில் சொல்வேன்: எ.வ.வேலு கலகல!

திங்கட்கிழமை, 17 மார்ச் 2025      தமிழகம்
EVa-Velu 2023 04 01

Source: provided

சென்னை : மானிய கோரிக்கையில் செங்கோட்டையனுக்கு பிடித்ததுபோல பதில் சொல்வேன் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

சட்டசபை கூட்டத்தொடரின் நேற்றைய கேள்வி-பதில் நேரத்தின்போது முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன் கேள்வி எழுப்பி பேசினார். அப்போது பேசிய அவர், ஈரோடு முதல் கோபிசெட்டிபாளையம் வரையில் நான்கு வழிச்சாலை விரிவு படுத்தப்பட்டன. கோபி நகரத்திற்குள் நெரிசல் அதிகமாக ஏற்படுகின்ற காரணத்தின் அடிப்படையில் எங்களது ஆட்சி காலத்தில் புறவழிச்சாலை அமைக்க ஆய்வு பணிகள் மேற்கொண்டு நிதி ஒதுக்கப்படும் சமயத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அமைச்சர் இடத்தில் நான்கு முறை கேட்கின்ற போது, அந்த பகுதிக்கு நான் வந்திருக்கிறேன். உடனடியாக செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போன நிதியாண்டில் சொன்னார். ஆனால் அந்த பணிகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே அந்த பணிகளை நிறைவேற்றுவதற்கு இந்த அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "கோபிசெட்டிபாளையத்தை பொறுத்த வரை அங்கு மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. உறுப்பினரும் கோரிக்கை வைத்திருக்கிறார். இது தொடர்பாக மானிய கோரிக்கையின் போது அவருக்கு பிடித்த மாதிரி பதில் சொல்கிறேன்" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து