Idhayam Matrimony

பா.ஜ.க. அமலாக்கத்துறையை கருவியாக பயன்படுத்துகிறது: எங்கள் மடியில் கனம் இல்லை, அதனால் வழியில் பயம் இல்லை: அமைச்சர் ரகுபதி

திங்கட்கிழமை, 17 மார்ச் 2025      தமிழகம்
Raghupathi 2023 04 07

Source: provided

சென்னை : எங்கள் மடியில் கனம் இல்லை, அதனால் வழியில் பயம் இல்லை.  என  அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். 

தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.1,000 கோடி அளவுக்கு ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி கூறியதாவது;- மாற்றுக் கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் அமலாக்கத்துறை, வருமானவரித்துறையை ஏவி பா.ஜ.க. அரசு பழிவாங்குகிறது. அமலாக்கத்துறையை ஒரு கருவியாக பா.ஜ.க. பயன்படுத்துகிறது.

அமலாக்கத்துறை சோதனை நடத்தி இத்தனை நாட்களாகியும், இதுவரை ரூ.1,000 முறைகேடு நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான எந்த ஆதாரத்தையும் அவர்கள் வெளியிடவில்லை. இந்த குற்றச்சாட்டுகளை அமைச்சர் செந்தில் பாலாஜி தெளிவாக மறுத்துள்ளார்.

டெல்லி பாணியில் தமிழகத்தில் அரசியல் செய்துவிடலாம் என பா.ஜ.க. கனவு கண்டு கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் விழிப்புணர்வு மிக்கவர்கள். எனவே, இங்கு பா.ஜ.க.வின் பாய்ச்சல் செல்லுபடி ஆகாது. நமது பிள்ளைகளின் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, இந்தி திணிப்பை வலியுறுத்தி பா.ஜ.க. அரசு நமக்கு தர மறுக்கிறது.  இதையெல்லாம் கண்டித்து தமிழ்நாட்டில் இருக்கும் பா.ஜ.க., தமிழக மக்களின் நலனுக்காக போராட தயாராக இருக்கிறதா?  

அமலாக்கத்துறையை பழிவாங்கும் செயல்களுக்காக பயன்படுத்துகிறார்களே தவிர, அவர்களால் எந்த குற்றச்சாட்டும் கூற முடியாது. எங்கள் மடியில் கனம் இல்லை, அதனால் வழியில் பயம் இல்லை. தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் எந்த தவறுக்கும் இடம் கொடுக்க மாட்டார்." இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து