எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கொல்கத்தா : கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கில், புதிய சி.பி.ஐ. விசாரணை கோரிய மாணவியின் பெற்றோர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயது முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். இந்த சம்பவம் நாடு முழுவதுமே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் மருத்துவமனையில் தன்னார்வலராக பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தங்கள் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததில் மேலும் சிலர் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறி மேலும் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என உயிரிழந்த மாணவியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தனர்.
இந்த மனு நேற்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில், மாணவியின் பெற்றோர் அளித்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதேநேரத்தில் மாணவியின் பெற்றோர், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி அமர்வு முன்பாக இதுதொடர்பாக வழக்கு தொடரலாம் என்று கூறினர்.
பிரேத பரிசோதனையில் உள்ள தகவல்களை பார்க்கும்போது தங்கள் மகளின் மரணத்தில் குற்றவாளியான சஞ்சய் ராய் தவிர வேறு நபர்களும் ஈடுபட்டிருக்கலாம். எனவே சி.பி.ஐ. இதுகுறித்து மேலும் விசாரிக்க வேண்டும் என்று அவரது பெற்றோர் கோரி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


