Idhayam Matrimony

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் இன்று மாலை பூமிக்கு திரும்புகிறார்

திங்கட்கிழமை, 17 மார்ச் 2025      உலகம்
Sunita-Williams 2024-03-29

Source: provided

 வாஷிங்டன் : 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை பூமி திரும்பவுள்ளார்.

வெறும் 9 நாள்கள் பயணமாக விண்வெளி மையத்துக்கு சென்ற நாசா விஞ்ஞானிகள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோா் ஆகியோர், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.

நீண்ட முயற்சிகளுக்கு பிறகு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்த டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி மையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றடைந்தது. இதன்மூலம்  நேற்றிரவு பூமிக்கு புறப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் இன்று மாலை வந்தடைவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் ஆகியோருடன் டிராகன் விண்கலத்தில் மேலும் இரண்டு விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பவுள்ளனர். மார்ச் 17ஆம் தேதி இரவு 10.45 மணிக்கு (அமெரிக்க நேரப்படி) சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சரியாக மார்ச் 18ஆம் தேதி மாலை 5.57 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தையொட்டி கடல் பகுதிக்கு டிராகன் விண்கலம் வந்துசேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து