எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : மடிக்கணினி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் தி.மு.க. - அ.தி.மு.க. உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இ.பி.எஸ். எழுப்பிய கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை தமிழக பொது பட்ஜெட்டும் சனிக்கிழமை வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து பேரவை நிகழ்வுகள் நேற்று (திங்கள்கிழமை)காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன. பேரவைத் தலைவர் அப்பாவு மீதான அ.தி.மு.க. வின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு பின்னர் வாக்கெடுப்பில் தீர்மானம் தோல்வி அடைந்தது. இதனால் அப்பாவு, பேரவைத் தலைவர் பதவியில் தொடர்ந்து வருகிறார்.
பின்னர், 'கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்' என பட்ஜெட்டில் கூறியது குறித்து தி.மு.க. - அ.தி.மு.க. இடையே காரசார விவாதம் நடைபெற்றது. பள்ளி மாணவர்களின் அறிவு வளர்வதற்கும் விஞ்ஞான வளர்சிக்காகவும் வழங்கப்பட்ட மடிக்கணினி திட்டத்தை நிறுத்தியது ஏன்? 4 ஆண்டுகளாக தி.மு.க. ஆட்சியில் ஏன் மடிக்கணினி வழங்கவில்லை? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "மடிக்கணினி திட்டத்தை நாங்கள் நிறுத்தவில்லை, அ.தி.மு.க. ஆட்சியிலேயே நிறுத்தி விட்டீர்கள். அந்த திட்டத்தைதான் சரிசெய்து தற்போது பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறோம். மடிக்கணினி திட்டத்தை மீண்டும் கொண்டுவந்தது தி.மு.க. அரசுதான். தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, வாக்களித்தவர்கள் மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து பணியாற்றுவோம் என்று கூறினோம். அதைத்தான் தொடர்ந்து செய்து வருகிறோம்" என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


