Idhayam Matrimony

புதிய கல்விக் கொள்கை அமலுக்கு எதிர்ப்பு: புதுச்சேரி சட்டசபையில் இருந்து தி.மு.க., காங்கிரஸ் வெளிநடப்பு

திங்கட்கிழமை, 17 மார்ச் 2025      இந்தியா
Rangaswamy 2024 08 08

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை அமலுக்கு எதிர்ப்பு தெரிவித்து  சட்டப்பேரவையில் இருந்து  தி.மு.க. , காங்கிரஸ் எம்.எல்.ஏ. க்கள் வெளிநடப்பு செய்தனர்.  

புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.  சந்திர பிரியங்கா புதிய கல்விக் கொள்கை  குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது தி.மு.க.  எம்.எல்.ஏ.  நாஜிம் குறுக்கிட்டபோது, “உங்கள் பேரக்குழந்தையும், இங்குள்ள பலரின் குழந்தைகளும் சி.பி.எஸ்.இ.  பள்ளிகளில்தான் படிக்கிறார்கள்'' என்றார். அதற்கு “புதிய கல்விக் கொள்கை வேறு - சி.பி.எஸ்.இ.  கொள்கை வேறு” என்று தி.மு.க.  எம்.எல்.ஏ. க்கள் பதில் தந்தனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.  

அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சிவா, "புதியக் கல்விக் கொள்கை மத்திய அரசு சட்டமா? 2028-க்கு பிறகு இதை கட்டாயமாக்கி விடுவீர்கள். மக்கள் கருத்துக்கு எதிராக செயல்படுகிறீர்கள்" என்றார். அப்போது மீண்டும்  கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. மைக்குகளின் இணைப்பு நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில், பேரவைத் தலைவர் செல்வம், ''சி.பி.எஸ்.இ.  பாடத்தை புதுச்சேரியில் அமல்படுத்தியது யார் என்பது அனைவருக்கும் தெரியும்'' என்றார். எதிர்க்கட்சித் தலைவர் சிவா, ''புதிய கல்விக் கொள்கையை நீங்கள்தான் அமல்படுத்தியுள்ளீர்கள். மாணவர்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். கொள்கையை அமல்படுத்துவதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்'' என்றார். அதையடுத்து தி.மு.க. , காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து