Idhayam Matrimony

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு

திங்கட்கிழமை, 17 மார்ச் 2025      தமிழகம்
Selvaperundhai 2024-04-19

Source: provided

சென்னை : சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தி.மு.க.  கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை, சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஏப்ரல் 30-ந்தேதி வரை நடைபெறும் என்றும்   17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

இதற்கிடையில், சபாநாயகர் அப்பாவுவை அந்த பதவியில் இருந்து நீக்கக்கோரும் தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் (அ.தி.மு.க.) கடந்த ஜனவரி மாதம் கொடுத்துள்ளார். இந்த தீர்மானத்தின் மீது நேற்று விவாதம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்றது. சபாநாயகர் அப்பாவு சட்டசபையை விட்டு வெளியே சென்றார். துணை சபாநாயகர் பிச்சாண்டி அவையை வழிநடத்தினார். இந்த நிலையில், சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தி.மு.க.  கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க. , இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தீர்மானத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். பா.ஜ.க, பாமக உறுப்பினர்கள் யாரும் பேரவையில் இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து