முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிவானவர் - கண்டிப்பானவர்:நடுநிலையோடு செயல்படுபவர் பேரவைத் தலைவர் அப்பாவு : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திங்கட்கிழமை, 17 மார்ச் 2025      தமிழகம்
CM-1 2023-11-18

Source: provided

சென்னை : நடுநிலையோடு செயல்படுபவர் பேரவைத் தலைவர் அப்பாவு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பேரவைத் தலைவர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், அப்பாவு கனிவானவர், அதேநேரத்தில் கண்டிப்பானவர். என் தலையீடோ, அமைச்சர்கள் தலையீடோ இன்றி பேரவையை நடத்தி வருகிறார். நடுநிலையோடு செயல்படுபவர் பேரவைத் தலைவர் அப்பாவு.

விருப்பு, வெறுப்பின்றி வாதங்களை முன்வைக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர். யார் மீதும் யார் வேண்டுமானாலும் விமர்சனம் வைக்கலாம். சுதந்திரக் காற்றை இந்த பேரவை சுவாசிக்கிறது. அனைவரையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்த்து சிறப்பாக செயல்படுகிறார். அதிமுக ஆட்சியில் அவைத் தலைவர்கள் நடந்துகொண்டது போல் தற்போதையை பேரவைத் தலைவர் அப்பாவு நடந்துகொள்வதில்லை. அரசு மீது குற்றம், குறை கூற முடியாதவர்கள், இவ்வாறு தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து