முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை - மும்பை போட்டிக்கான டிக்கெட் மார்ச் 19-ம் தேதி துவக்கம்

திங்கட்கிழமை, 17 மார்ச் 2025      விளையாட்டு
MDS 2025-03-17

Source: provided

சென்னை : ஐ.பி.எல்.  2025 தொடரின் சென்னை - மும்பை அணிகளுக்கான போட்டி மார்ச் 23-ல் சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இப்போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை மார்ச் 19 அன்று தொடங்குகிறது.

ஐ.பி.எல். தொடர்...

ஐ.பி.எல்.  2025 தொடர் வருகின்ற மார்ச் 22-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் திடலில் தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பெங்களூரு ராயம் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. சென்னையில் மார்ச் 23-ல் நடைபெறும் இரண்டாவது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

டிக்கெட் விற்பனை...

இந்நிலையில், வரும் மார்ச் 19 ஆம் தேதி காலை 10.15 மணிக்கு www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் விற்பனை தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விற்பனைக்காக டிக்கெட்டின் விலை ரூ. 1,700 முதல் ரூ. 7,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை அணியின் மகேந்திர சிங் தோனி ஓய்வுபெறுவார் என்ற மனநிலை மக்களிடையே நிலவுவதால், டிக்கெட்டானது சிறிது நேரத்திலேயே விற்றுத்தீர்ந்து விடும் எனக் கூறப்படுகிறது. சென்னை மெட்ரோவில் சிஎஸ்கே கிரிக்கெட் டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து