Idhayam Matrimony

மாஸ்டர்ஸ் லீக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ. 1 கோடி பரிசு

திங்கட்கிழமை, 17 மார்ச் 2025      விளையாட்டு
MDS 2025-03-17

Source: provided

ராய்ப்பூர் : மாஸ்டர்ஸ் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ. 1 கோடி பரிசு வழங்கப்பட்டது. 

மாஸ்டர்ஸ் லீக்... 

முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

விண்டீஸ் 148 ரன்கள்... 

இந்நிலையில், ராய்ப்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் டுவைன் சுமித் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். ஓரளவு நிலைத்து விளையாடி அரை சதம் கடந்த சிம்மன்ஸ் 57 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்தியா சார்பில் வினய் குமார் 3 விக்கெட்டும், ஷபாஸ் நதீம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்தியா வெற்றி...

இதையடுத்து, 149 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அம்பதி ராயுடு அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 50 பந்தில் 74 ரன்கள் எடுத்து அவுட்டானார். சச்சின் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், இந்தியா 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. ஆட்ட நாயகன் விருது அம்பதி ராயுடுவுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் வென்ற அணிக்கும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கும் பரிசு தொகையை வழங்கினர்.

பரிசு தொகை...

9 போர்கள் அடித்த விருது- அம்பதி ராயுடு - 50 ஆயிரம் ரூபாய்

அதிக சிக்ஸ் அடித்த விருது- அம்பதி ராயுடு - 50 ஆயிரம் ரூபாய்

கேம்சேஞ்சர் ஆஃப் தி மேட்ச் விருதை ஷபாஸ் நதீம் வென்றார்

சிறந்த பவுலருக்கான விருதை ஷபாஸ் நதீம் வென்றார்

ஆட்ட நாயகன் விருதை 50 பந்துகளில் 74 ரன்கள் அடித்த அம்படி ராயுடு வென்றார். இந்த சீசனில் அதிக ஃபோர் எடுத்த குமார் சங்கக்காரா (38 ஃபோர்ஸ்) 5 லட்சம் ரூபாய் பரிசு வென்றார்.

ரூ. 1 கோடி பரிசு... 

இந்த சீசனில் அதிக சிக்ஸ் எடுத்த ஷேன் வாட்சன் (25 சிக்ஸ்) 5 லட்சம் ரூபாய் பரிசு வென்றார்.  சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் வெற்றி பெற்ற இந்தியா மாஸ்டர்ஸ் அணிக்கு 1 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த ரன்னர் அப் அணியான வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து