முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். அணி கேப்டன்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

திங்கட்கிழமை, 17 மார்ச் 2025      விளையாட்டு
IPL 2025-03-17

Source: provided

மும்பை : 18-வது ஐ.பி.எல். தொடரில் அணி கேப்டன்கள்  பெறப்போகும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.பி.எல். தொடர்... 

 ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. இந்த முறை நடக்கும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல். தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஒவ்வொரு அணி வீரர்களும் பயிற்சியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

கேப்டன்கள் சம்பளம்...

பத்து அணிகள் பலப்பரீட்சை நடத்தும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மே மாதம் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இன்னும் சில நாட்களில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஒவ்வொரு அணி கேப்டன்கள் பெறும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

ரிஷப் பண்ட் அதிகம்...

ரிஷப் பண்ட் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்) ரூ. 27 கோடி

ஸ்ரேயஸ் அய்யர் (பஞ்சாப் கிங்ஸ்) ரூ. 26.75 கோடி

பேட் கம்மின்ஸ் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்) ரூ. 18 கோடி

ருதுராஜ் கெய்க்வாட் (சென்னை சூப்பர் கிங்ஸ்) ரூ. 18 கோடி

சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான் ராயல்ஸ்) ரூ. 18 கோடி

அக்சர் பட்டேல் (டெல்லி கேபிட்டல்ஸ்) ரூ. 16.5 கோடி

சுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்) ரூ. 16.5 கோடி

ஹர்திக் பாண்டியா (மும்பை இந்தியன்ஸ்) ரூ. 16.35 கோடி

ரஜத் பட்டிதர் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) ரூ. 11 கோடி

அஜிங்கியா ரஹானே (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) ரூ. 1.5 கோடி

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து