முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல்.அணி கேப்டன்கள் கூட்டம்: பி.சி.சி.ஐ. ஏற்பாடு

திங்கட்கிழமை, 17 மார்ச் 2025      விளையாட்டு
BCCI 2023 06 13

Source: provided

மும்பை : ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளின் கேப்டன்களுடன் கூட்டம் நடத்த பி.சி.சி.ஐ. ஏற்பாடு செய்துள்ளது.

ஐ.பி.எல். தொடர்...

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். வெற்றிகரமாக 17 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இதன் 18-வது சீசன் வருகிற 22-ம் தேதி தொடங்க உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

பி.சி.சி.ஐ. ஏற்பாடு... 

இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது. இந்த தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளின் கேப்டன்களுடன் கூட்டம் நடத்த பி.சி.சி.ஐ. ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி வருகிற 20-ம் தேதி (வியாழக்கிழமை) மும்பையில் உள்ள பி.சி.சி.ஐ. தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் 10 அணிகளின் கேப்டன்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. உத்தரவிட்டுள்ளது. கேப்டன்களைத் தவிர, 10 அணிகளின் மேலாளர்களும் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.

போட்டோசூட்...

இந்த கூட்டத்தில், வரவிருக்கும் சீசனுக்கான புதிய சேர்க்கைகள் மற்றும் மாற்றங்கள் குறித்து அணிகளுக்கு தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது போக 10 அணிகளின் கேப்டன்களுக்கான போட்டோசூட் ஆகியவை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து