Idhayam Matrimony

தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டப்படும்: நயினார் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

செவ்வாய்க்கிழமை, 18 மார்ச் 2025      தமிழகம்
Durai-Murugan 2024-06-21

Source: provided

சென்னை: தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டித்தர வேண்டும் என்று பா.ஜ.க. சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்தார்.

தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் சட்டசபையில் கேள்வி, பதில் நேரத்தில், தாமிரபரணி நதி வற்றாத ஜீவ நதியாக உள்ளதாகவும், மழைக்காலங்களில் பெருமளவு நீர் வீணாக கடலில் கலக்கின்ற நிலையில், தாமிரபரணி ஆற்றில் 4, 5 இடங்களில் தடுப்பணை கட்டித்தர வேண்டும் என்று பா.ஜ.க. சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை மிக முக்கியமானது. நம்மிடம் இருக்கும் ஒரே வற்றாத நதி தாமிரபரணி தான். அத்தியாவசியமான கோரிக்கை உள்ள நிலையில் முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றப்படும்" என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து