முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

140 கோடி இந்தியர்களும் பெருமிதம்: சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் மோடி கடிதம்

செவ்வாய்க்கிழமை, 18 மார்ச் 2025      இந்தியா
Sunita-Williams 2024-05-02

Source: provided

புதுடில்லி: 140 கோடி இந்தியர்களும் உங்கள் சாதனைகளில் பெருமிதம் கொண்டுள்ளனர் என்று பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில், சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதம் ஒன்றை மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் பகிர்ந்துள்ளார்.

மார்ச் 1 ஆம் தேதி மோடி எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது: ”இன்று ஒரு நிகழ்ச்சியில், பிரபல விண்வெளி வீரர் மைக் மாசிமினோவைச் சந்தித்தேன். எங்கள் உரையாடலின்போது, ​​உங்களைப் பற்றியும் உங்கள் பணியைப் பற்றியும் எவ்வளவு பெருமைப்படுகிறோம் என்பதைப் பற்றி விவாதித்தோம். இந்த உரையாடலைத் தொடர்ந்து, உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன்.

நான் அமெரிக்காவுக்கு வருகை தந்தபோது அதிபர் டிரம்ப் மற்றும் முன்னாள் அதிபர் பைடனைச் சந்தித்தபோது, ​​உங்கள் நலம் குறித்து விசாரித்தேன். 140 கோடி இந்தியர்களும் உங்கள் சாதனைகளில் பெருமிதம் கொண்டுள்ளனர். நீங்கள் ஆயிரக்கணக்கான கி.மீ. தொலைவில் இருந்தாலும், தொடர்ந்து எங்கள் இதயத்துக்கு நெருக்கமாக இருக்கிறீர்கள். இந்திய மக்கள் உங்கள் ஆரோக்கியத்துக்காகவும் வெற்றிக்காகவும் பிரார்த்தனை செய்கிறார்கள். பூமிக்கு திரும்பிய பிறகு, இந்தியாவில் உங்களைப் பார்ப்பதற்கு நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்தியா தனது மிகவும் புகழ்பெற்ற மகள்களில் ஒருவரை வரவேற்பதற்காக மகிழ்ச்சியுடன் காத்திருக்கும். நீங்களும், வில்மோரும் பாதுகாப்பாக திரும்ப வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து